Monday, June 6, 2016

இறைவி The Goddess

ஒரு மனிதனின் சுதந்திரம் எப்படி உணரப்படவேண்டும்?
"தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றது என்று வேறொருவன் அவனுக்காகக் குரல் கொடுக்கும்படி வைக்காமல் இருப்பதில் உணரப்படவேண்டும்"

எமது சமூகத்தில் ஒரு மனிதனின் சுதந்திரம் எப்படி உணரப்படுகிறது?
"வேறோருவனது சுதந்திரம் பறிபோகிறது என்று "அவன் எனக்கு வேண்டப்படுபவனாகில்" குரல்கொடுப்பதில் உணரப்படுகிறது"

என்னைப்பொறுத்தவரை இந்த உண்மையை உணர்த்துவதுதான் "இறைவி".


கார்த்திக் சுப்புராஜ் இப்படி ஒரு படம் எடுத்து இயக்குனர்கள் வரிசையில் உயர்ந்து தெரிகிறார்! மணிரத்னமும் பாலச்சந்தரும் ஏனோ தொலைவாகிப்போன நெருடல் படம் பார்த்து முடிந்ததும்.
இவ்வளவு கால ஆண் மையப்படுத்தப்பட்ட/எப்படியோ ஆணையே உயர்த்திக்காட்டி எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் நிதர்சனத்தின் முன்னால் தவிடுபொடி ஆகிவிடுகின்றன.

இறைவியின் தனித்துவமே சமத்துவம் பேசுதல்தான். என்ன, பேசுவது பெண் அல்ல, திரைக்கதை. பேச வைப்பவர்கள் ஆண்கள் என்பதில் வித்தியாசம் தெரிகிறது.

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று பாரதி சொன்னது இதைதான். என்று ஆண்கள் நாம் ஆண் என்கிற அகங்காரத்தை விடுகிறோமோ அன்று ஆரம்பமாகும் சமத்துவம். என்று பெண்கள் நம்மால் ஆண்கள் இன்றி தனித்து வாழ முடியும் என்கிற முடிபை பெண்ணுரிமை பேசவேண்டும் என்பதற்காக மட்டும் இன்றி இயல்பாக எடுக்கிறார்களோ அன்று முடியும் இவ்விதி.

எஸ் ஜே சூர்யா, சேதுபதி, பொபி சிம்ஹா : வெவ்வேறு கோணங்களில் வாழும் சராசரி ஆண்கள். இங்கு சராசரி என்னும் பதம் என்னைப்போல ஒவ்வொரு ஆணையும் குறிக்கும். எதோ ஒரு வகையில் நாம் பெண்களை குறைத்து மதிப்பிடுவது உண்மை. அதேபோல அஞ்சலி, கமலினி, வடிவுக்கரசி மூவரும் சராசரி பெண்களை நினைவுபடுத்துகிறார்கள். சேதுபதியின் காதலியாய் வரும் கதாபாத்திரம்தான்: ஆண்கள் உதாசினப்படுத்தும், சமத்துவத்துடன் வாழும் பெண்ணை உருவகிக்கும் பெண்.

இயல்பு வாழ்க்கையைப் படம் எடுக்கும்போது நமது இயக்குனர்கள் எப்போதுமே யதார்த்தத்தினை கொலை செய்து கைதட்டல்களை மட்டும் எதிர்பார்த்து எடுப்பார்கள். அதனை உடைத்ததற்கே கார்த்திக்கு ஒரு சபாஷ்!

சந்தோஷின் இசை படத்திற்குப் பக்கபலம்.

ஆக மொத்தம் மசாலா இல்லாத உள்ளதை உள்ளபடி சொல்லும் உண்மையான படம்.
"உண்மைகள் கசப்பானவை!"

~Shanan


  

Wednesday, June 1, 2016

ராசாளி!!! (Falcon)

"இந்த ஒரு பாட்டுக்காய் எத்தனை நாள் தவமிருந்தேன்" - இதுதான் முகப்புத்தகத்துல எல்லாரின்ட பதிவும். ஆனால் ஒரு சராசரி ARR ரசிகனுக்கு இது இன்னும் ஒரு வரம். தலைவர் இன்னும் எத்தனையோ பாட்டு போடுவார், இதையும் தூக்கி சாப்பிடுற மாதிரி.
பஞ்சதனில இருந்து வெளில வாற எல்லாப் பாட்டுமே சிறந்ததா இருக்கோணும் எண்டு நினைக்கிறவர் தலைவர், எண்டதால ஒவ்வொரு பாட்டுமே 'ரஹ்மேனியக்'குகளுக்கு கொண்டாட்டம்தான்...

இனி ராசாளியப் பற்றி :

தாமரை என்றொரு அற்புதமான கவிதாயினியை இன்னும் கோடிகாட்டியிருக்கிறது ராசாளி! பாடலின் சிறப்பே வரிகள்தான். ஒருத்தன் தன் காதலியுடன் பைக்ல போறத ஒரு கவிஞனால திருப்புகழ் வடிவில சொல்லமுடியுமா? முடியும், தாமரையால்!
அதுக்கு சிறிதும் சுவை குன்றாமல் மெட்டுப்போட முடியுமா? ஜுஜுபி!, யாரு கிட்ட :D 

"முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்,
பின்னில் சிறு  பச்சைக்கிளி முதுகினில்,
வாழ்வில் ஒரு பயணம் இது, முடிந்திட விடுவேனோ..." செத்திரலாம் பேசாம :)

தலைவருக்கு இப்ப எல்லாம் காதல் கூடிட்டுது போல,
"இது போதும் எனக்கு இது போதுமே, வேறென்ன வேணும் நீ போதுமே" எண்டுறார்,
பிறகு "இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன" வாம்,
இப்ப "வாழ்வில் ஒரு பயணம் இது, முடிந்திட விடுவேனோ"... ஹும், நடக்கட்டும் :)

இதுக்கெல்லாம் சிகரம் வைக்கிறாப்போல :

"முன்னும் இது போலே அனுபவம்,
 கண்டேன் என சொல்லும்படி நினைவிலை, 
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலை, மறவேனே"!
-சிவசிவா இந்தாளுக்கு காதல் முத்திடுச்சு, ரசிகக்குஞ்சுகளுக்கு திகட்டவா போகுது! (என்ன, தோல்வில இருக்கிறவன நினைவுகள மீட்டிப்பார்க்க வச்சு சாவடிக்கப் போகுது பாட்டு!)

 ஒவ்வொரு பைக் லவ்வருக்கும் இந்தப் பாட்டு ஒரு ஹிட் நம்பர்! பின்னால லவ்வர ஏத்திக்கொண்டு நெடுந்தூரப் பயணம் போறது ஒரு கவிதை! அதை அச்சுப் பிசகாம பாட்டுப் போட்டு, அதிலயும் போற வழிகளில இருக்கிற சிறப்பையும் சொல்லி (கொட்டும் பனி மட்டும் துணை இரவினில், ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை, விண்மீன்களும் வீம்பாய் எனை தொடர்வதை)... சப்பா, சான்சே இல்ல!

பாட்டுக்கு இன்னொரு தூண் சத்யப்ரகாஷ் மற்றும் சாஷா த்ருபாதி! கர்நாடக சங்கீதத்துல அண்ணன் சத்யாவ அடிக்கிறதுக்கு அல்காவால மட்டும்தான் முடியும்! ப்ளிஸ் ரஹ்மான்ஜி, செக் ஔட் அல்கா டூ :). அப்புறம் சாஷாட குரல், ரஹ்மான் கொண்டு வர்ற எந்த புதுகுரலும் சோடை போகாது! ராசாளிட வேகத்த விட சத்யா, சாஷாட மனவேகம் கூடிட்டுது, They have beaten the falcon!

இவ்வளவும் போட்டிட்டு ரஹ்மானிட்ட போய் கேட்டா இது ஒரு ஆன்மீக இசை என்பார்! Yes, he is talking about God here, not the romance between lovers. அந்தக் கோணத்துலயும் பாக்கலாம்.

எல்லாம் ஓகே, ஆனா படத்துல இந்தப் பாட்ட நீ சொதப்பி வச்சிருந்தாய் எண்டால் மவனே சிம்பு! உனக்கு மோட்சமே இல்லை :)

Looking forward to AYM. Thanks GVM to have ARR and Thamarai mash up. Need more of these in years to come!


~'Rahmaniac' Shanan